கோவை, அக் : 16 ,
இளைஞர்கள் அரசு நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பணிகளை நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில், கவுண்டம்பாளையம் MLA டாக்டர் கனிமொழி சந்தோஷ் முன்னெடுத்துள்ள KGF (Kavundampalayam Governance Fellowship) திட்டம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள், ஆறு மாதங்கள் MLA உடன் இணைந்து பயிற்சி பெற்று, அரசு நிர்வாகம், மக்கள் குறைகள் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து நேரடி அனுபவம் பெற உள்ளனர். நிகழ்வில் அவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.இத்திட்டம் இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என MLA கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.



