இரணியல், ஏப்- 24
இரணியல் அருகே ஆளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபாலன் மகன் ஹரிஹரன் (22) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். இது குறித்து சிறுமியின் உறவினர்கள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு பேரும் நேற்று ஊருக்கு வந்துள்ளனர். சிறுமியை அவரது தாயார் வீட்டில் ஒப்படைத்து விட்டு இரவு ஹரிஹரன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடைய நேற்று காலை ஹரிஹரன் அவரது குடும்பக்கோவி கோவிலில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உறவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரிஹரன் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரிஹரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.