சுசீந்திரம்.மே.3
வாக்கிங் சென்றவரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு
சசிந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை பல்ப நாபன் புதூரை சார்ந்தவர் இருதயராஜ் 57 இவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார் இவர் தினந்தோறும் காலை மாலை வேலைகளில் வாக்கிங் செல்வது வழக்கம் அதுபோல சம்பவத்தன்று தேரூர் பைபாஸ் சாலையில் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்துள்ளார் அப்போது அங்கே வந்த திக்குலான் விளையை சார்ந்த அரவிந்த் குமார் 24 என்பவர் இருதயராஜை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பாக்கெட்டில் இருக்கும் ரூபாய் எடு என அவர் பாக்கெட்டில் இருந்த 180 ரூபாயை பிடுங்கி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார் இது குறித்து இருதயராஜ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அரவிந்த் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்