குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (29). தொழிலாளி. இவர் சம்பவ தினம் அதே பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை பார்த்து ஆபாச செய்கை காட்டியுள்ளார். அதை இளம்பெண் கண்டுகொள்ளாதல் அவர் வீட்டிற்குள் அஜித் அத்துமீறி நுழைந்துறைந்தார்.
பின்னர் இளம் பெண்ணின் செல்போனை எடுத்து வைத்துக்கொண்டு, படுக்கைக்கு வந்தால் தான் செல்போனை தருவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் இளம்பெண் சத்தம் போட்டு உள்ளார். உடனே அஜித் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து இளம்பெண் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அஜித் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


