சென்னை, ஜன-21, அர்ஜுனா ஆர்ச்சரி( வில் வித்தை )அகாடமி மற்றும் வேர்ல்ட் யங் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய உலக சாதனை வில்வித்தை போட்டி அதன் நிறுவனரும், பயிற்சியாளருமான ரத்தின சபாபதி ஏற்பாட்டில் சென்னை நொளம்பூரில் நடைபெற்றது.
இச்சாதனை போட்டியில் ஆர்.கே.சாய் ஸ்ரீ கார்திக், ஆர்.கே. சந்தான பாலன், தன்விதாமாலினி,, நிதீஷ், ஸ்ரீ சம்யுக்தா, , தன்ஷிகா, லிகில் சரண் , எம்.வி .புருஷோத்தமன், கவின் வீரசேனன் ஆகிய சிறுவயது போட்டியாளர்கள்
12 நிமிடம் 12 வினாடிகளில் 144 அம்புகளை ஏய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர் .
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கருணாநிதி,
தமிழ்நாடு ஃபிட்னஸ் ஸ்டுடியோ அசோசேசியன் தலைவர் ஃபகத் ஜஹாங்கீர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .மேலும் இந்நிகழ்ச்சி நடுவராக தமிழ்நாடு பெண்கள் உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் சித்ரா அரவிந்தன் செயல்பட்டார்.
பின்னர் முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
அனைவருக்கும் ஏதோ ஒரு திறமை உள்ளுக்குள் இருக்கும் அதை பல்வேறு விளையாட்டின் மூலமும் கலைத்திறன் மூலமும் வெளிப்படுத்தி உலகறிய செய்கின்றனர் .
இந்த வகையில் வில்வித்தை என்பது நமது பாரம்பரிய வீர விளையாட்டுக் கலைகளில் ஒன்று . பழங்கால வீரத்தின் அடையாள விளையாட்டாகவே அது விளங்குகிறது .
இந்த பாரம்பரிய விளையாட்டுக் கலையை அர்ஜுனா ஆச்சாரி அகடமி சிறு வயது பிள்ளைகளுக்கு பயிற்றுவிப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் . இளம் வயது பிள்ளைகளை இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் போது நல்ல எண்ணங்கள் வளரும். எதிர்காலத்தில் நேர்மறை எண்ணங்களால் நம் சமுதாயம் மேம்படும்.
குறிப்பாக 12 நிமிடம் 12 வினாடிகளில் 144 அம்புகளை ஏய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்வதில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்து பெரும் பங்காற்றிவரும் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் ரத்தின சபாபதிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் இளம் வீரர்கள் மாநில அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் உலக அளவிலும் பல வெற்றியைப் பெறுவதற்கு இந்நிகழ்ச்சி வழிவாக்கும் என்றார்.