அரியலூர், நவ;13
அரியலூர் மாவட்ட நகரில் உலக திருக்குறள் கூட்டமைப்பு நடத்தும் கோரிக்கை முழக்கப் பேரணி நடைபெற்றது,
இதில் செம்மொழித் தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். சென்னை – மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை முழக்க பேரணி அரியலூர் காமராஜர் திடலில் துவங்கி அண்ணா சிலை வரை நடைபெற்ற பேரணியை மாநில துணை பொதுச்செயலாளர் முனைவர் வழக்கறிஞர் எஸ்.வி. சாந்தி தலைமையில், மாவட்ட வளர்ச்சி குழுத் தலைவர் சீனி பாலகிருஷ்ணன், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு அ. நல்லப்பன் ஆசிரியர், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் , திருவள்ளுவர் ஞானமன்றம் நிறுவனர்,அஞ்சை இராவணன், உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புலவர் இரா.அரங்கநாடன், அகிலம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் ஷோபனா பன்னீர்செல்வம் அரியலூர், மகளிர் மன்றம் அனுராதா பார்த்தசாரதி அரியலூர், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணை செயலாளர் தமிழ்களம் இளவரசன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட கரண ஆசான் புலவர் சி. இளங்கோ, தமிழ்ப்பண்பாட்டு பேரமைப்பு பொருளாளர் முனைவர் கோ.வி. புகழேந்தி, அரியலூர் நகர வணிகர் சங்கம் வெ. இராமலிங்கம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஆலோசகர் புரவலர் மா. சத்தியமூர்த்தி, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் பச்சை மனிதன் தங்க சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில், முன்னதாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பொறியாளர் பெ.நாகமுத்து அனைவரையும் வரவேற்று அனைத்து பொதுமக்களும் மாணவிகளும் கலந்துகொண்டு உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கோரிக்கை முழக்க பேரணி கோரிக்கையை முன்னிலைப்படுத்தி கோஷம் எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அண்ணா சிலையில் முடிவுற்ற இப்பேரணியை அரியலூர் எம்எல்ஏ வழக்கறிஞர் கு. சின்னப்பா முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட மகளிர் அணி தலைவர் வீ.மங்கையர்க்கரசி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேரணி நிகழ்ச்சி முடிவுற்றது. பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் போக்குவரத்து காவல்துறை செய்திருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்