தக்கலை, ஏப்- 24-
குமாரபுரம் அருகே முட்டை காடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ் (53) மரம் ஏறும்
தொழிலாளி. நேற்று தோட்டத்தில் பலாப்பழம் பறிப்பதற்காக மருந்துகோட்டை என்ற பகுதிக்கு சென்றார். அப்போது பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு திடீரென வின்சென்ட் ராஜன் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் அங்கு சென்று பார்த்த போது வின்சென்ட் ராஜ் மரத்துக்கு கீழே ரத்த வெள்ளத்தில் அசைவற்று கிடந்துள்ளார்.
தகவலின் பேரில் தக்கலை போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது வின்சென்ட் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்.
இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று மதியம் மருந்து கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்துள்ளது. எனவே மரத்தில் ஏறிய பொழுது வழுக்கி விழுந்தாரா? அல்லது அவர் நீண்ட நேரமாக உயிருக்கு போராடி உள்ளதாக தெரிகிறது. அதனால் வேறு ஏதாவது சம்பவம் நடந்ததா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.