அஞ்சுகிராமம், ஆக. 5 –
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம், மருங்கூர் பேரூர் கழக இளைஞரணி சார்பில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா நான்காண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் இளைஞரணி மாநில தலைவர் உதயநிதியின் அறிவுறுத்தலின்படி குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் வழிக்காட்டுதலோடு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ராஜாவூரில் நடந்தது.
கூட்டத்திற்கு மருங்கூர் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் நடந்தது. அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், பேருர் செயலாளர்கள் மருங்கூர் மகேஷ், அஞ்சை இளங்கோ, தேரூர் முத்து, மயிலை டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்புவிருந்தினராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் வக்கீல் சரவணன், பொன் ஜாண்சன் கலந்துகொண்டனர். திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட செயலாளர் மகேஷ், என் உயிரினும் மேலான இளம் பேச்சாளர் ஏஞ்சலின், செல்வகணபதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
மேலும் மருங்கூர் இளைஞரணி நவீன் கிஷோர், முருகன், சுபி, அலெக்சாண்டர், கிளாட்சன், ஸ்டார் மின், செந்தில், சித்திரை புத்திரன் விஜி, ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ரமா ரமேஷ், ஷீலா கிளாட்சன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, பேருர் துணை அமைப்பாளர்கள், பேரூர் நிர்வாகிகள் மற்றும்
கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



