தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன், மகளிர் தொண்டர் அணி தலைவர் உமா மகேஸ்வரி, மகளிர் அணி அமைப்பாளர் சிவசங்கரி ,மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் விஜயா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கினார் .இதில் மகளிர் அணி துணைத் தலைவர் அண்ணாமலை, மகளிர் தொண்டர் அணி துணைத் தலைவர் லைலா பானு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வி, கவிதா, கிருஷ்ணலீலா, சுதா, லாவண்யா, பொண்ணுதுரைச்சி, கற்பகம், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் அன்னலட்சுமி, ராமலட்சுமி, தமிழ்செல்வி ,விஜயலட்சுமி, பிரபாவதி, உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.



