சுசீந்திரம் நவ 22
நாகர்கோவில் நகரப் பகுதியில் ஓடும் பஸ்களில் பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தெங்கம்புதூர் அருகே உத்தண்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லதா.இவர் வழுக்கம்பாறையில் நடந்த தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உத்தண்டன் குடியிருப்பில் இருந்து வடசேரி செல்லும் பஸ்ஸில் பயணம் செய்தார்.பறக்கை பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது லதா கழுத்தில் கடந்த 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் நகையை தேடி பார்த்தார்.ஆனால் கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த லதா இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.தெங்கம்புதூர்,பறக்கை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் லதாவிடம் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.