நாகர்கோவில் – அக்- 23,
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி புல்லு விளை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் பிரின்சியா (31) , என்பவருக்கும் ஊற்று விளை, கல்குறிச்சி பகுதியை சேர்ந்த மரிய செல்வம் மகன் செல்வ ஜோஸ் (35) என்பவருக்கும் கடந்த 2017 ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக 35 சவரன் தங்க நகையும் ரூ.3 லட்சம் ரொக்க பணமும் , ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும் கொடுத்துள்ளனர். திருமணத்தின் போது செல்வஜோஸ் கேரளா மாநிலம் கொல்லஞ்சியில் கல் விற்பனை தொழில் செய்து வந்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே பிரின்சியாவை பார்த்து நீ ஒல்லியாக கருப்பாக பார்ப்பதற்க்கு அழகாக இல்லை அசிங்கமாக இருப்பதாக செல்வ ஜோஸ் கூறி வந்துள்ளார். இந்நிலையில் இருவரின் திருமண பந்தத்தின் விளைவாக அபிபா (06) , ஆதிக் (04) இரு குழந்தைகளைகளுடன் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் . தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்தி உடலுறவு கொள்ள வலியுறுத்தி வந்ததாகவும் அதற்க்கு சம்மதிக்காத நிலையில் தன்னை அடித்து பெற்றோர் வீட்டுக்கு விரட்டி விடுவார். கணவர் என்ற முறையில் என் மீதோ என் குழந்தைகள் மீதோ எந்த அக்கரையும் கொண்டது கிடையாது. அவருடைய தொழில் வருமானம் பற்றிய விபரங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளாத நிலையில் , வாரத்தில் சனி, ஞாயிறு, மற்றும் திங்கள் ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே வீட்டில் தாங்கி வந்ததாகவும் அப்போதும் என்னை அடித்து கொடுமை படுத்தி என்னுடைய நகைகளையும் பிடுங்கி விட்டு என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு விரட்டி பெற்றோர் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பல முறை எனது மாமனார் மரிய செல்வராஜ் மற்றும் உறவினர்களிடம் சேர்த்து வைக்க கோரி முறையிட்டதற்க்கு என்னை அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசி என்னுடைய குழந்தைகள் என் கணவருக்கு பிறக்க வில்லை அதை நான் நிரூபிக்க டி என் ஏ பரிசோதனை மூலம் நிரூபித்தால் மட்டுமே சேர்த்து வைப்பதாக கூறினார்கள். தான் தற்போது பெற்றோர் வீட்டின் அருகில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருவதாகவும் இந்நிலையில் தனது கணவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அறிந்து தற்போது தன் கணவர் வீட்டின் முன்பு தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கும் வரை கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.