தஞ்சாவூர் பிப்.1
தஞ்சாவூரில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் 211பயனாளிகளுக்கு ரூபாய் 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கோவி .செழியன் :: வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ மேயர் சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
விழாவில் உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு 211 பயனாளி களுக்கு ரூபாய் 36 இலட்சத்து 71 ஆயிரத்து,450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். கல்வியில் முழு கவனம் செலுத்தி உயர்ந்த நிலையை அடைய வேண்டும் தமிழக முதலமைச்சர். மு க ஸ்டாலின் குழந்தைகள் படிப்பில் உயர தமிழ் புதல்வன் திட்டம் புதுமை பெண் திட்டம் நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்