சிவகங்கை: ஏப்:02
சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அவைத்தலைவர் பாலுச்சாமி தலைமையிலும் துணைச்செயலாளர் வில்லிபட்டி பண்ணையார் ஆ. இராமமூர்த்தி, பொருளாளர் தொமுச முருகேசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டமானது நடைபெற்றது.
சிவகங்கை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் திருமலை ஆ. முத்துராமலிங்கம் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது 72 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் குழுமத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையிலான பட்டிமன்றம் மற்றும் 2072 பொதுமக்களுக்கு நலத்திடட உதவிகள் வழங்கிடும் விழாவை சிவகங்கை வடக்கு ஒன்றியம் கீழப்பூங்குடி கிளைக்கழகத்தில் சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் ஒக்கூர் சோமசுந்தரம், முன்னாள் சேர்மன் தமறாக்கி முத்துராமலிங்கம், சோழபுரம் மாரி, மாவட்ட விவசாய தொழிலாளரணி முன்னாள் ஊராட்சி தலைவர் தமறாக்கி ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர் கண்டாங்கிபட்டி மந்தக்காளை, ஐடி விங் தமறாக்கி அம்பலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடையமேலூர் வேல்முருகன் நன்றி கூறினார்.