திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுவது வழக்கம்
இந்த சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆடு மற்றும் கோழிகளின் சந்தையாகவும் அதன் பின்பு காய்கறிகள் பல சரக்கு மற்றும் தின்பண்டங்கள் போன்றவை விற்கக்கூடிய சந்தையாகவும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்னும் தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் திருப்புவனம் ஆட்டுச் சந்தைக்கு 2000 த்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது இதில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் ஆடுகள் விற்பனையாகி விட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த ஒரு நாளில் மட்டும் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்ததாக கூறுகின்றனர். இதனால் வாங்குபவரும் விற்பவரும் என இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



