காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் எல்.சுப்பிரமணியன் இல்ல திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ் அதிமுக கழக துணை பொதுச் செயலாளர் கே .பி.முனுசாமியிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் மாநில பொது குழு உறுப்பினர் எல் சுப்பிரமணியன் அவர்களின் இளைய மகள் திருமண வரவேற்பு விழா வருகின்ற 12ஆம் தேதி காவேரிப்பட்டணத்தில் நடைபெற உள்ளது.
இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு எல். சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுக கழக துணை பொதுச் செயலாளர்
கே.பி முனுசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வாழ்த்து பெற்றனர். அப்போது அதிமுக ஒன்றிய பொருளாளர் பழனிச்சாமி, கர்ணன், குணசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துக்குமார், தவமணி, கோவிந்தன், வேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.