சங்கரன் கோவில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் புளியங்குடி புன்னையாபுரம் அருகில் உள்ள முந்தல் மலையடிவாரத்தில் ‘உழவர்களை நேசிப்போம்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் திரு. என். பழனிசெல்வம் தலைமைவகிக்க புதிய பார்வை அரசவை உறுப்பினரும் மேலாளர் புன்னையாபுரம் ஊராட்சி தலைவருமான திரு.பி. ராமசந்திரன் புரவலர் திரு. கே.எஸ்.சி.சண்முகம் அவர்களும் முன்னிலை வகித்தார்கள். திரு.கே. ஆறுமுகம் பாரதி பாடல் பாடிட, திரு. இ. முத்துமாரி குறளும் பொருளும் அளித்திட, திரு.மு.மாணிக்கவாசகம்
இன்று ஒரு தகவல் வழங்கிட நிகழ்ச்சியின் துணைத்தலைவர். திரு.செ.ராமச்சந்திரன்
வரவேற்புரை ஆற்றிட ஸ்ரீ அர்ஜீன் இயற்கை வழி வேளான்பண்ணை திரு. சரவணன் ‘விவசாயமும் அதன் சிறப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவ நிலையம் தலைவர் முனைவர் திரு.ம. அறிவழகன் வியாச கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நிர்வாக அலுவலர் திரு.உ.காளித்துரை தென்காசி மாவட்ட தோ;தல் தனிப்பிரிவு துணை வட்டாச்சியா; திரு.மாரியப்பன் கலந்து விவசாயத்தின்; சிறப்புகளைப் பற்றிய கருத்துக்களை வழங்கினார்கள்.
சுமார் 50-க்கு மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை பாிமாறிக்கொண்டனா;. அனைவருக்கும் அமைப்பின் சார்பில் கௌரவம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அமைப்பின் மேலாளர் துணைத்தலைவர் திரு. ஏ.எஸ் முப்பிடாதி நன்றியுரை நவில தேசிய கீதத்துடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.