தர்மபுரியில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர், பாலக்கோடு, பொம்மிடி, பென்னாகரம் ஆகிய கிளைகளில் இருந்து புதியதாக 10 நகரப்பேருந்துகள் துவங்கப்பட்டுள்ளது.
தருமபுரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதிய மகளீர் விடியல் 10 நகரப்பேருந்துகளை தமிழக வேளான்மை துறை அமைச்சர்
M.R.K.
பன்னீர்செல்வம் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய நகர பேருந்துகளை கொடி அசைத்து துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, சட்டமன்ற உறுப்பினர்கள்,
G.K. மணி, S.P.
வெங்கட்டேஸ்வரன், நகராட்சி தலைவர் லஷ்மி மாது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (தருமபுரி) மண்டல பொது மேளாலர் செல்வம் உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



