காஞ்சிபுரம் மே 05
காஞ்சிபுரம் மாவட்டம் தமிழக வெற்றி கழகம் சார்பில் காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் பிரபு ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் எஸ். பி.கே.தென்னரசு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர் தர்பூசணி நீர் மோர் திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மதன், ஒன்றிய கழக செயலாளர் சார்லஸ், மாநகர இளைஞரணி மொய்தீன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



