மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சீர்காழி தாலுக்கா மேலமுவர்க்கரை பெருந்தோட்டம் கிராமத்தில் மீணவ கிராம கூட்டம் நடைபெற்றது அதில் அக்கிராம சத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் அவரது மகன்கள் சூர்யா ஸ்ரீராம் விஷ்ணு ஆகிய சென்றுள்ளனர் அப்போது மூவரையும் நீங்கள் ஏன் கூட்டத்திற்கு வந்தீர்கள் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் நீங்கள் எப்படி வரலாம் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி நாகராஜன் என்பவரின் தூண்டுதலின் பேரில் ராம்ஜி நீலமேகம் பிரதாப் ஜீவா சுப்பிரமணியன் நிதிஷ் சுகுனேஸ்வரன் சற்குணம் , நிவாஸ் ,விஜேந்திரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து லதாவின் கணவர் சண்முகசுந்தரத்தை தலையில் அரிவாளால் தாக்கி அவரது காதை கத்தியால் அறுத்துள்ளனர் உடன் அவரது மகன்கள் சூர்யா ஸ்ரீராம் விஷ்ணு ஆகிய நான்கு பேரையும் கையில் வைத்திருந்த கட்டையாலும் இரும்பு ஆயுதங்களாலும் கற்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சண்முகசுந்தரத்திற்கு தலையில் 11 தையலும் காதில் நான்கு தையலும் போடப்பட்டுள்ளது அவரது மகன்கள் ஸ்ரீராம் கையில் எலும்பு உடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது மற்ற மகன்களுக்கு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து சண்முகசுந்தரத்தின் மனைவி லதா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி,மனு அளித்துள்ளார்.



