By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
சென்னைதமிழ்நாடு

ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு

Last updated: December 8, 2025 2:08 pm
December 8, 2025
42 Views
Share
SHARE

சென்னை, டிச. 08 –

தென்னிந்தியாவின் தொழிலதிபர், வள்ளல் மற்றும் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் புரவலராகத் திகழ்ந்த காலம் சென்ற ஸ்ரீ பொட்டிப்பட்டி ஓபுல் ரெட்டியின் (1925–2025) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய அஞ்சல் துறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு ‘மை ஸ்டாம்ப்’ அஞ்சல் தலையை வெளியிட்டது.

சென்னையில் நடைபெற்ற சிறப்பு நூற்றாண்டு விழாவில், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி முன்னிலையில் சென்னை அஞ்சல் சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ். எம் இந்தத் தபால் தலையை வெளியிட்டார்.

ஸ்ரீ பி. ஓபுல் ரெட்டி ஒரு தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தொழில்துறையின் ஜாம்பவான் ஆவார். 1972-ல் ஜப்பானின் மட்சுஷிடா (பானாசோனிக்) – [Matsushita (Panasonic)] நிறுவனத்துடனான இவரது முன்னோடித்துவமிக்க கூட்டு செயல்பாடு, ‘இந்தோ நேஷனல் லிமிடெட்’ (நிப்போ பேட்டரிஸ்) நிறுவனம் உருவாக வழிவகுத்தது. இவரது தலைமையின் கீழ், நிப்போ (Nippo) இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ‘டிரை-செல்’ (dry-cell) ப்ராண்ட்களில் ஒன்றாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. ‘நிப்போ ஹைப்பர்’ மற்றும் ‘நிப்போ ஸ்பெஷல்’ போன்ற புதுமையான தயாரிப்புகளை இவர் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் புகழாரம்:

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி பேசுகையில், “ஸ்ரீ பி. ஓபுல் ரெட்டி தொழில்துறையில் முன்னோடித்துவமிக்க தொலைநோக்கு, எல்லோரிடத்திலும் அன்பு காட்டும் மனிதநேயம் மற்றும் ஆழ்ந்த கலாச்சார ஈடுபாடு ஆகியவற்றின் அரிய கலவையாகத் திகழ்ந்தார். தொழில் ரீதியாக, அப்போலோ மருத்துவமனையின் ஆரம்ப கால இயக்குநர்களில் ஒருவராக அவர் எங்களுடன் கைகோர்த்து நின்றார்.

இந்தோ நேஷனல் கூட்டுமுயற்சியில் அவர் ஆற்றிய பணியையும், நேர்மையையும் நோக்கத்தையும் முன்னிறுத்தினால் இந்தியத் தொழில் துறை எதையும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டியது. அவரது ஈகைக் குணம், கர்நாடக இசையின் மீதான அவரது பற்று போன்ற குணங்கள் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதில் அவருக்கிருந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கின்றன. இந்த நூற்றாண்டு விழா அவரை நாம் மனதார நினைவு கூரும் தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் அழகாக வெளிப்படுத்திய மதிப்புகளின்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒரு புதிய அழைப்பாகும்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
வெள்ளானூர் உடற்பயிற்சி பூங்கா பணி
வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ் பியை சந்தித்து வாழ்த்து
திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பணியாளர்கள் சங்ககூட்டமைப்பு பேரணி

August 23, 2024
75 Views
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
கோவை கார்த்திபுரத்தில் வர்த்தகர்கள் ஆலோசனைக் கூட்டம்
விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில்
பைக்கை உடைத்து பணம் திருட்டுபோலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account