சிவகங்கை:மார்ச்:14
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்யராஜ் பேசியதாவது : ஊராட்சி செயலர் பணியிடத்திற்கான ஊதிய விகிதத்திற்கு குறைவான ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி சார்ந்த சலுகைகள் கூட ஊராட்சி செயலாளர்களுக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது . எனவே முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை
எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் . மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்களை அரசின் பென்ஷன் திட்டத்தில் இணைக்கும் வரை எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும் . இவ்வாறு அவர் பேசினார் . இதற்கு முன்னதாக சங்கச் செயலர் முத்துராமலிங்கம் , வேம்பங்குடி பாலசுப்பிரமணியன் உள்பட மாவட்ட சங்க நிர்வாகிகள் , மற்றும் மாநில நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்கள்