பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப் பெரிய உயரமான மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்த கல்வெட்டை சில சமூக விரோதிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு உடைத்து விட்டார்கள்.உடனடியாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனையின் பேரில் பார்வையிட்டதின் அடிப்படையில் நேற்று பொது பணி துறையின் சார்பில் கட்டுமான வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.இப்பணியை வர்த்தக காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார், ராமன்,லெட்சுமணன், பகவதி கண்ணு, திருவட்டார் மேற்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி ஐடா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



