டிச30
திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோடு சந்திப்பு அருகே சிவகங்கை சீமை ஆண்ட ராணி வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில பொதுச் செயலாளர் திரு செந்தில் வாண்டையார் தலைமையில் நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனத் தலைவர் முகவை மாவீரர் கணேசன் தேவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
முன்னனிலை மாநிலச் செயலாளர் சரவணன். மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் மாரியப்பன். துணைச் செயலாளர் சதீஷ். மாநகர் மாவட்டச் செயலாளர் சௌந்தர பாண்டியன். கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பு தெற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொன்ராம் முன்னிலை வகித்தனர் செய்தியாளர்கள் சந்தித்த தலைவர் கணேசன் திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உள்ளிட்டுவைகளை குறைக்க வேண்டும் எனவும் கொங்கு மண்டலத்தில் முக்குலத்தோருக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் எனவும் அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதனை முழுமையாக வரவேற்பதாகவும் மேலும் திருப்பூர் மாவட்டத்தில் தேவரினத்தோர் எங்கு ஆலோசனைக் கூட்டம் ஆர்ப்பாட்டம் போராட்டம் உள்ளிட்டவரை நடத்த அனுமதி கேட்டால் காவல்துறை மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அதனை காவல்துறை அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார் மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஆலோசித்து கூட்டணி பற்றி தெரிவிப்போம் என தெரிவித்தார் மேலும் இதில் கௌரவ சிறப்பு அழைப்பாளர்களாகமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமி முன் அன்சாரி .நெல்லை டாக்டர் மூர்த்தி தேவர். ராமநாதபுரம் இளைய சமஸ்தான மன்னர் நாகேந்திர சேதுபதி. ராயல் லட்சுமணன். எஸ் பி ராஜா.சுரேஷ் தேவர். ஆத்மா கார்த்திக்.அமிர்தலிங்கம். ஜீவிதாநாச்சியார்.சுவிதாயுவராஜ்.மகாலிங்கம்.காசிராஜன்.துரைரமேஷ். உள்ளிட்ட தலைவர்களும் தென்னாடு மக்கள் கட்சியின் மாநில மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நகர பகுதி வார்டு ஒன்றிய நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.