வேலூர், டிச. 02 –
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தூய்மை காவலர்களுக்கு நீதி கேட்டு வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஏ ஐ சி சி டி யு சி மாவட்ட பொருளாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அவர்களின் கோரிக்கையாக தூய்மை காவலர்கள் பணியில் தனியார்மயம் வேண்டாம் மற்றும் தூய்மை காவலர்கள் பணியில் தூய்மை காவலர்களுக்கு நிரந்தர பணி வேண்டும்.
அரசாணை 62 படியான சம்பளம் அறிவித்தபடி வழங்கிட வேண்டும். சமூக நல பாதுகாப்பு திட்டத்திற்கான இ எஸ் ஐ உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை போனசாக 20 சதவீதம் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட அமைப்பாளர் பரசுராமன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட குழு தோழர்கள் மகேஸ்வரி, புவனேஸ்வரி, கோகிலா உட்பட பெருந்தலராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



