ஈரோடு மே 26
ஈரோட்டை அடுத்த முகாசி அனுமன் பள்ளியில் அன்னபூரணி அம்பிகை அனுமனீஸ்வரர் சுவாமி சின்ன அம்மன் பெரிய அம்மன் வேம்பராயர் சாமி கோவில் உள்ளன இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த 15 ம் தேதி பூச்சாட்டுதழ் நிகழ்ச்சியுடன் தொடங்கியது 16 ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் 17 ம் தேதி கொடியேற்று விழா நிகழ்ச்சியும் நடந்தது இதையடுத்து 22 ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம் நிகழ்ச்சியும் 23 ந் தேதி அனுமனீஸ்வரர் கோவிலில் தீபாரதனை நிகழ்ச்சியும் சுவாமிகள் ரதத்தில் எழுந்தருதல் நிகழ்ச்சியும் தேர்வு நிலை பெயர்த்தல் மற்றும் பொங்கல் பூஜைகளும் நடந்தன நேற்று காலை தேர்கள் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தது ஒரு தேரில் விநாயகரும் இன்னொரு தேரில் அன்னபூரணி அம்பிகையும் மற்றொரு தேரில் சின்ன மாரியம்மன் பெரிய மாரியம்மனும் உள்ள மூன்று தேர்கள் சென்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூன்று தேரையும் வடம்பிடித்து இழுத்து சென்றனர் முக்கிய வீதிகள் வழியாக இந்த தேர்கள் சென்றன வழி நெடிகிலும் ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து வேடர் பரி உற்சவம் மற்றும் பரிபாட்டை நிகழ்ச்சியும் இன்று காலை கொடி இறக்குதல் தரிசனம் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சியும் நடந்தது விழாவை யொட்டி கடந்த 15 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை தினமும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடந்தது விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன
இதற்கான ஏற்படுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்



