கரூர் மாவட்டம், அக்டோபர் – 22
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடவம்பாடி கிராமம், முத்தம்பட்டி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான அரசு பொதுப் பாதையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கொடுக்க கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோழர் களம் அமைப்பு தலைவர் தி.க.சண்முகம் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் தோழர்களம் தலைமை நிலைய செயலாளர்
தமிழன் சு.கவின் குமார்,
மாநில அவைத் தலைவர்
இரா.ராஜகோபால்
முத்தம்பட்டி கிளை தலைவர் தி.சரவணக்குமார் கிளைச் செயலாளர் சு.பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் முத்தம்பட்டி ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தினர்.