தேவாரம் அக்: 03
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மாலை வேலைகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது சனிக்கிழமை கனமழை சற்று அதிகமாக இருந்ததாலும் மேலும் தேவாரம் மலை அடிவாரப் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக ஓடை வழியாக வெள்ளம் பெருக்கிட்டு பெருமாள்பட்டியில் இருந்து அழகர் நாயக்கன்பட்டி வரை தார் சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து சைக்கிள் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்களின் வாகனத்தை இழுத்துச் சென்றது அருகில் இருந்த பெருமாள்பட்டி பொதுமக்கள் லாவகமாக அவர்களை காப்பாற்றினர்.
இது பற்றி அவர்களிடம் கேட்டபோது பெரியகுளம் கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் குளம் நிறைய தண்ணீர் தேங்கி விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்க வேண்டிய நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி தார் சாலை மார்க்கமாக வீணாகச் சென்றது. நீர் மேலாண்மை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழைக்காலங்களில் பெரியகுளம் கண்மாயை முறையாக தூர்வாரப்பட வேண்டும் இனிவரும் காலங்கள் மழைக்காலங்கள் என்பதால் உடனடியாக ஆழமாக கண்மாயையும் ஓடையையும் தூர்வாரப்பட வேண்டும் மேலும் ஓடைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்