By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை
ஈரோடு

ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை

Last updated: June 20, 2025 5:05 pm
June 20, 2025
56 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 20 –

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் தாளவாடி வட்டாரங்களின் வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் உள்ள 9 குக்கிராமங்களை இணைக்கும் சாலைப்பணிகளுக்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் அணைப்போடு வனச்சாலை ரூ.1.09 கோடி மதிப்பீட்டிலும் தம்முரெட்டி வனச்சாலை ரூ.13.96 இலட்சம் மதிப்பீட்டிலும் ஒன்னக்கரை வனச்சாலை ரூ.19.10 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. தாமரைக்கரை கொங்காடை சாலை முதல் தாளக்கரை சாலை வரை ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் திம்பம் தாளவாடி சாலை முதல் மாவநத்தம் சாலை வரை ரூ.81.96 இலட்சம் மதிப்பீட்டிலும் திம்பம் தாளவாடி சாலை முதல் காளிதிம்பம் சாலை வரை ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலும் திம்பம் தாளவாடி சாலை முதல் ராமரணை சாலை வரை ரூ.51.45 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் குதியாலத்தூர் ஊராட்சியில் கடம்பூர் மாக்கம்பாளையம் சாலையில் உள்ள குதியாலத்தூர் பள்ளம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் கடம்பூர் மாக்கம்பாளையம் சாலையில் உள்ள சக்கரைப்பள்ளம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் பவளக்குட்டை சாலை முதல் கரளையம் சாலை பணிகளும் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.60.94 இலட்சம் மதிப்பீட்டில் டி.பி தொட்டி சிக்கனந்தி தம்படிகுட்டை சாலை ரூ.24.27 இலட்சம் மதிப்பீட்டில் கொங்கள்ளி சாலை முதல் பசப்பன்தொட்டி சாலை ரூ.47.18 இலட்சம் மதிப்பீட்டில் பாரதிபுரம் முதல் நரிக்குறவர் காலனி வரை சாலை பணிகள் முடிவுற்றுள்ளது. மேலும் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கொல்லேகால் ஆசனூர் கொட்டாடை முதல் அட்டப்பாடி வரை சாலை ரூ.70.11 இலட்சம் மதிப்பீட்டில், கொட்டாடை முதல் ஜோகிதொட்டி வரை சாலை ரூ.16.47 இலட்சம் மதிப்பீட்டில், கொல்லேகால் கொட்டாடை முதன்மை சாலை முதல் ஓடமந்தை வரை சாலை ரூ.3.88 கோடி மதிப்பீட்டில், பெஜலட்டி முதல் இட்டரை வரை சாலை ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் கெட்டவாடி பனஹள்ளி முதல் ஜூரகள்ளி சாலை ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் வைத்தியநாதபுரம் முதல் கோட்டமாளம் சாலை ரூ.95.32 இலட்சம் மதிப்பீட்டில் தலமலை தாளவாடி சாலை முதல் சின்சின் குட்டை வரை சாலை, ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் ஜே.ஆர்.எஸ்.புரம் முதல் கோட்டமாளம் சாரை வழி தாளுத்தி கே.பி.மாளம் வரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.11.71 கோடி மதிப்பீட்டில் தாமரைக்கரை
கொங்காடை சாலை முதல் பறையூர் ஒசூர் முதல் வனம் சாலை, ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தாமரைக்கரை முதல் கொங்காடை வரை (மணியாச்சி பள்ளம் பாலம் வழியாக) சாலை, ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் துருசனாம்பாளையம் முதல் சோளகனை வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தாமரைக்கரை முதல் தேவர்மலை வரை சாலை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் விலாங்கோம்பை வனச்சாலை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. இதன் மூலம் மலைவாழ் மக்கள் அவசர சிகிச்சைக்காக குறித்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ வசதிகள் பெறவும் மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரி சென்றடையும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் வனச்சாலைகள் அமைக்கும் பணிகள் 33.184 கி.மீ நீளத்திற்கு முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 16.806 கி.மீ நீளத்திற்கு சாலைப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்தியூர் மற்றும் தாளவாடியில் 6.050 கிமீ நீளத்திற்கு சாலைப் பணிகள் மேற்கொள்ள அரசிற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பெண்களுக்கு நடத்தப்பட்ட உதவிகள்
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை
46 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுடுகாட்டில் கஞ்சாவுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது

November 22, 2025
58 Views
25 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
இலவச கண் சிகிச்சை முகாம் ஈஞ்சம்பாக்கத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account