மாவட்ட பொருளாளர் அஜித் குமார் தலைமையில் சென்றனர் !
போகலூர், நவ.19-
இராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் அண்ணா சரவணன் ஆலோசனையின்படி மாநில அமைப்பு செயலாளர் மாநில இளைஞர் அணி செயலாளர் பந்தல் ராஜா வழிகாட்டுதலில் மாவட்ட பொருளாளர் அஜித் குமார் தலைமையில் தொழிலதிபர் சூர்ய பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் சொந்தங்கள்
சுதந்திரப் போராட்ட வீரர் தியாக செம்மல் சட்ட மேதை கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 88 வது நினைவு நாளில் திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மரியாதை செலுத்தும் நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து
இராமநாதபுரம், உத்தரகோசமங்கை, தங்கச்சிமடம், மண்டபம், தொருவளூர், மட்டியரேந்தல், காவனூர், ராமேஸ்வரம், சிக்கல், முதுகுளத்தூர், பரமக்குடி, மஞ்சள்கொள்ளை, மஞ்சள்பட்டினம், கே.வலசை, தர்மராஜபுரம், மேலபெருங்கரை, பார்த்திபனூர், டி.எம்.கோட்டை, கடலாடி , சாயல்குடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். முன்னதாக ஒட்டபிடாரத்தில் உள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர்
அஜித் குமார்
தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் ராமேஸ்வரம் மனோஜ் குமார், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் அருண்குமார், மாவட்ட செயலாளர் தொருவளூர் சரவணகுமார் , காவனூர் பொறுப்பாளர் அரவிந்த் சிவா, பாண்டியூர் பொறுப்பாளர் செல்வா, மாவட்ட பொறுப்பாளர் பரமக்குடி சபரி ராஜ், திரு உத்தரகோசமங்கை பொறுப்பாளர் ஜெகன் பிள்ளை,மட்டியரேந்தல் பொறுப்பாளர் முனியராஜ், முதுகுளத்தூர் பொறுப்பாளர் பாண்டி முருகன் உட்பட நூற்றுக்கணக்கானோர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்று கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் கோஷங்கள் எழுப்பினர்.