கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட குழித்துறை ஸ்ரீ மகாதேவர் திருக்கோயிலில் திருக்கோயில் நிதி ரூ 9.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா, குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் துளசிதரன் நாயர், ஜோதிஷ்குமார் முன்னிலை வகித்தனர். மராமத்து பொறியாளர் ஐயப்பன், கண்காணிப்பாளர் சிவக்குமார், ஊழியர் மினி, ஒப்பந்தகாரர் E.M. ராஜா உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.



