பூதப்பாண்டி – நவம்பர் -20 –
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள வடக்கு ஆண்டித்தோப்பு பகுதியில் பூதப்பாண்டி எஸ்.ஐ.லட்சுமணன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது கேரளபதிவென் கொண்ட சொகுசு கார் வந்தது அந்த காரை சோதனை செய்தபோது அதில் பத்துக்கும் மேற்பட்ட சாக்குகள் கட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அந்த காரில் இருந்த இருவரையும் விசாரிக்கும் போது அவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி முத்துநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அதில்ஒருவர் சீனிவாசன் (42) மற்றொருவர் சுரேஷ் (25) என்றும் இந்த சாக்கு மூட்டையில் ரேசன் அரிசி இருப்பதாகவும் அதை கேரளாவிற்க்கு அதிக விலைக்கு விற்பதற்க்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். உடனே போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து அதிலிருந்த சுமார் ஒரு டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.