மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு – பூதப்பாண்டி – மே _28 – பூதப்பாண்டியை அடுத்துள்ள உலக்கையருவியை அடுத்த சட்ட ரஸ் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை மற்றும் காற்றினால் ரப்பர் மரம் முறிந்து மின்சார கம்பியின் மேல் விழுந்ததில் இரண்டு மின் கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைபட்டுள்ளது நேற்று முன்தினம் இரவு நடந்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது அழகிய பாண்டியபுரம் மின்சார அலுவலக பணியாளர்கள் உடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நடும் பணியினை செய்து வருகிறார்கள்



