கந்திலி:டிச:9,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகரம் பகுதியினை சேர்ந்த மரகதாம்பிகை-54 என்ற பெண்மணி தனது அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும் பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மரகதாம்பிகை அணிந்திருந்த 05 சவரன் தங்கச்செயினை பறித்துச் சென்றனர். என புகார் பெறப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெகநாதன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 1.பாபு-41, 2. முருகன்-51 ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. மேற்படி எதிரிகள் திருப்பத்தூர் பகுதியில் மேலும் இரண்டு வழக்கில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து அவர்களிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது வழக்கு சொத்தை மீட்ட திருப்பத்தூர் DSP தலைமையிலான தனி படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.