தருமபுரி, செப்டம்பர் 17 –
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் பூ கடை ரவி, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் அசோகன், சுபாஷ் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



