நீலகிரி. ஏப். 29
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்ட விரோதமாக பழங்குடி மக்களை வெளியேற்றுவதை கட்டிலகிரி மாவட்ட பழங்குடி உறவை ஆட்சியர் அலுவலகம் அதில் ஈடுபட்ட னர் அதில் கீழ்கண்ட கோரித்தனர் முதுமலை குளியல் காப்பகத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட புலியாளம், மண்டகரை, நாகம்பள்ளி, நெல்லிக்கரை , கண்டித்தால், பெண்ணை, முதுகுளி கிராமங்களை சேர்ந்த காட்டுநாயக்கர் பணியற் முள்ளு குறும்பர் வெட்டு குறும்பர் இருளர் ஆகிய பழங்குடி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்
புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுத் தொகையில் முறைகேடு செய்த வனச்சரகர், வழக்கறிஞர் நில புரோக்கர்கள் மீது ஐந்து ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி நடத்திட வேண்டும் புலிகள் காப்பகத்திற்குள் வாழ்ந்து வரும் பழங்குடிகளை கட்டாயப்படுத்தி பழங்குடி மக்களை வெளியேற்றக்கூடாது புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றுவது 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இழப்பீடு தொகையை 25 லட்சம் வரை உயர்த்திதர வேண்டும் என்று ஒன்றிய அரசு வழங்கும் பண உரிமைகளுக்கான இழப்பீடுடன் தமிழக அரசு வழங்கும் கூடுதல் இழப்பீடான 10 லட்சம் நிதியை மற்றும் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவருக்கும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் 2008 மற்றும் நிலம் வகைபடுத்தல் மற்றும் பழங்குடி மக்கள் மறுவாழ்வு திட்டங்களை நடைமுறைபடுத்தவும் வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.
மேலும் பழங்குடி நலவாரிய உறுப்பினராக சேர்த்து அனைவருக்கும் ஆதார், குடும்ப அட்டை, பழங்குடி இனச் சான்றுகள் கிடைக்க செய்திட வேண்டும் என்றும் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்திட ஒரு குழு அமைத்து கிராம மக்களை சந்தித்து இடைநீக்களை முழுமையாக தவிர்த்து விட வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அனைத்து பழங்குடி மக்களான பணியர், இருளர், காட்டுநாயக்கர், குறும்பர், ஆளுக்குறும்பர் , முள்ளு குறும்பர் , பெட்டு குரும்பர் , கோத்தர், தோடர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி பழங்குடி மக்கள் வாழும் அனைத்து ஊர்களிலும் குடிநீர், சாலை வசதி, மின்சாரம் மற்றும் தொகுப்பு வீடுகள், குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் அமைத்து தர வேண்டும் என்றும் பழங்குடி மக்களின் நிலங்களை பிறர் வாங்குவதை தடை செய்து அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிய பழங்குடியினரிடத்தில் ஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பழங்குடி மக்களின் தமிழக செயற்பாட்டாளர் குணசெகரன் மற்றும் மாவட்ட பழங்குடிஙமக்ள் பிரதிநிதிகள் கூடலூர் பகுதி பழங்குடியினர் பலர் கலந்துகொண்டனர்