அஞ்சுகிராமம் நவ-29
அழகப்பபுரம் வியாபாரிகள் நல சங்க தலைவர் ஹில்மன் ப்ரூஸ் எட்வின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மயிலாடி கூண்டு பாலம் ஒரு கோடியே 70 லட்சம் நிதியில்
மயிலாடி அழகப்பபுரம் பேரூராட்சி நடுவில் நாகர்கோவில் அஞ்சுகிராமம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கூண்டு பாலம் மேலே மருந்துவாழ்மலை சேனல் தண்ணீரும் கீழே போக்குவரத்தும் நடந்து வருகிறது
இந்தப் பாலம் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டபட்டது. பாலம் பல ஆண்டுகள் ஆனதாலும்,போக்குவரத்திற்கு இடையூராக குறுகலாக இருந்ததாலும் அதை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் பேரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் நிதியில் பாலம் கட்ட உத்தரவிட்டார். புதிதாக பாலம் எந்த தொலைநோக்கு பார்வையுமின்றி அவசர கோலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. போக்குவரத்துகழக பஸ்கள்,மற்றும் வாகணங்கள் அந்த வழியாக செல்கிறது. இந்நிலையில் பாலத்தின் அடியில் ரோடு சீரமைக்கப்பட வில்லை இதனால் வாகணங்கள் செல்லும் பொழுது கல், சரல்கள் பெயர்ந்து வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சில விபத்துகளும் நடந்துள்ளது. மேலும் மழை காலங்களில் சகதியாய் பாத சாரிகள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலை யுள்ளது.எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைத்து போக்குவரத்துக்கு உதவ வேண்டும் தவறும் பட்சத்தில் வர்த்தகர்கள்,மாணவ,மாணவியர்,பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என
கூறிள்ளார்