நாகர்கோவில் நவ 25
குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் ஒன்று சங்குத்துறை கடற்கரையாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று பொழுதுபோககி வருகின்றனர். இந்த சங்குத்துறை கடற்கரையில் நேற்று முன்தினம் முதல் ஏராளமான நண்டுகள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றமும் வீசி வருகிறது. சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் லட்சக்கணக்கான நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி இருப்பது கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நண்டுகள் பொதுவாக கடற்கரை பகுதியில் மணலில் வளை கட்டி வாழும் பகல் வேளையில் வலையில் தங்கியிருக்கும் நண்டுகள் இரவில் தான் வெளிப்படும் நீரிலும், நிலத்திலும் இதனால் சுவாசிக்க இயலும். இதனால் கடல் நீரோட்டத்தையும் எளிதில் சமாளித்து வாழும். நண்டுகள் நடமாட்டம் குறைவாக இருந்தால் அவை வளைகளை விட்டு வெளியே வராமல் இருந்தால் காலநிலை உகந்ததாக இல்லை என்று மீனவர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தான் சிவப்பு நண்டுகள் அதிக அளவில் இறந்த வண்ணம் கரையொதுங்க தொடங்கியுள்ளன. காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சூழியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.