காலிங்கராயன் தினத்தை ஒட்டி ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டுவ நாசவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



