மதுரை பிப்ரவரி 10,
மதுரையில் நில அளவையினரின் முப்பெரும் விழா
தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில கூட்டம் மதுரை நாகமலை புதுக்கோட்டை கபிலன் மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நில அளவை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பிரபு, மாநில பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மாவட்டத் தலைவர் சபரிநாதன், மாநிலச் செயலாளர் மாரிச்செல்வம் ஆகியோர் வரவேற்புரை கூறினார். மாநாட்டிற்கு மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை (நில அளவை) மண்டல துணை இயக்குநர் கணேசன மாநாட்டினை துவக்கி வைத்தார். தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்களின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்திற்கு மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.