குமரி மாவட்டம் நாகர்கோயில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் ஆண்டு பவுர்ணமித் தேர் திருவிழாவை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அவருடன் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், நாகர் கோயில் தொகுதி எம்.எல்.ஏ. காந்தி, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ காரியம் ரமேஷ், மாநில வள்ளலார் பேரவை தலைவர் தவத்திரு சுவாமி பத்மேந்திரா உட்பட பலர் பங்கேற்று சுவாமி அருள் பெற்றனர்.ஏற்பாடுகளை திருவிழா கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.



