கல்லறைதோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும் – கிராம மக்கள் கோரிக்கை – பூதப்பாண்டி – மே – 6 – பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான கலுங்கடி பகுதியில் சுமார் முப்பது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள் அவர்களுக்கு என அந்த ஊரில் இரண்டு வழிபாட்டு தலங்களும் உள்ளது எனினும் இந்த ஊர் மக்களுக்கான கல்லறைதோட்டம் அந்த ஊரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள பழையாற்றின் அருகே அமைந்துள்ளது அதற்க்கு அவர்கள் செல்லும் பாதையானது வயல்களின் மட்டத்திலேயே அமைந்துள்ளது எனவே மழை காலம் மற்றும் விவசாய காலங்களில் இந்த பாதை சேறும் சகதியுமாக காணப்படுகிறது எனவே இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் இவர் களுக்கு பெரிய சிரமமாகவே இருந்து வருகிறது இது குறித்து இப்பகுதி பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எதுவும் நடைபெறவில்லை இந் நிலையில் நேற்று கலுங்கடி பகுதில் சுமார் 77 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்துள்ளார் அவருடைய இறுதி ஊர்வலம் இந்த சேறும் சகதியுமான பாதை வழியே தான் அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர்கள் எனவே இந்த கல்லறைதோட்டம் செல்லும் வழி பாதையை சீர் செய்து கான்கிரிட் தளம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வருகிறார்கள்



