நாகர்கோவில், அக். 15 –
கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்லின் (31). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். சம்பவ தினம் இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை திருடி சென்றனர். இது சம்பந்தமாக கருங்கல் போலீசில் புகார் அளித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு ஆய்வு செய்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து சென்றது தெரிந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தேகத்தின் பேரில் அஞ்சுகிராமம் பகுதி சேர்ந்த ஒரு நபரை விசாரணைக்கு நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரித்த போது கிட்டத்தட்ட அந்த நபர் தான் திருடியவர் என்பது உறுதியானது. எனவே அவரை கைது செய்து, நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்தனர். நேற்று இரவு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தயா கேந்திரா இல்லத்தில் தங்க வைத்து இருந்தனர். இன்று அதிகாலையில் அந்த நபர் போலீசார் ஏமாற்றிவிட்டு தப்பியுள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தப்பியவரை தேடி வந்தனர்.
மருத்துவமனை உலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து போது அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தப்பிய கொள்ளையன் பல வழக்குகளில் தொடர்பு உள்ளவன் என கூறப்படுகிறது. ஆனால் போலீசார் நழுவ விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


