சோழவந்தான்,மே.22-
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகா அம்மன், காளியம்மன், மாரியம்மன் ஆகிய முப்பெரும் தேவியின் முப்பெரும் கரகம் எடுக்கும் திருவிழா 5 நாட்கள் நடைபெறும். இதில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத் தான்
கடந்த செவ்வாய்க்கிழமை காளியம்மன், மாரியம்மன் கரகம் எடுத்து வந்தனர்.
அதன் பின்னர் இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டு இன்று காலை மன்னாடி மங்கலம் வைகை ஆற்றில் இருந்து ராமலிங்க சௌடாம்பிகை அம்மனுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்
கரகம் எடுத்து வந்து செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மதியம் முளைப்பாரி ஊர்வலமும்
மாலை சக்தி ரதி சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவை காடுபட்டி தேவாங்கர் உறவின் முறை மற்றும் விழா கமிட்டியார்கள், சௌடேஸ்வரி அம்மன் தேவாங்கர் சமூக அறக்கட்டளை, சௌடாம்பிகை இளைஞரணி மற்றும் மகளிர் அணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
சோழவந்தான் அருகே காடுபட்டி காளியம்மன் மாரியம்மன் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் முப்பெரும் விழா



