திருப்பத்தூர்:பிப்:04, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கலாபுரம் ஊராட்சியில் சமத்துவபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 20 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியின் பின்புறம் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் அருகே உள்ள சமையலறை கட்டிடம் எதிரில் கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றசாட்டு முன் வைக்கின்றனர்
இந்த குடியிருப்பு பகுதிக்குள் களரூர் மாடப்பள்ளி ஊராட்சி,கதிரம்பட்டிஊராட்சி,உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழிவு நீர் இந்த சமத்துவ புறத்தில் வந்து கலக்கின்றது இந்தப் பள்ளியின் பின்புறம் பகுதியில் நீர் தேங்கி பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் உள்ளது மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உணவு அருந்தும் பொழுது கழிவு நீர் துர்நாற்றம் வீசி நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் அதுமட்டுமின்றி குடிநீர் குழாயில் கலந்து நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது இதை முறைப்படி கழிவுநீர் கால்வாய் தூர்வாரி கழிவுநீர் தேங்காதவாறு செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்
சம்பவயிடத்திர்க்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராமிய காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்பகுதி மக்களுக்கு விரைவில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரி சரி செய்வதின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியினைச் சேர்ந்த பூபதி பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.