கரூர் மாவட்டம் – செப்டம்பர் – 18
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவு குளித்தலை அடுத்த,கே.பேட்டை பஞ்சாயத்து திம்மாச்சிபுரம் தென்கரை பாசன வாய்க்காலி பெரிய பாலம் சேதம் ஏற்பட்டு புதிய பாலம் கட்டும் பணியானது 165 இலட்சம் ரூபாய் கடந்த நான்கு மாதங்களலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்சமயம் தென்கரை வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பணியினை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையின் மூலம் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்சமயம் நீர்வரத்து அதிகமாக வந்த காரணத்தினால் தற்காலிக பாலத்தில் சிறிது சேதம் ஏற்பட்டது. அதனை பொதுப்பணி துறையின் ஒத்துழைப்புடன் நீர் வரத்தை குறைத்து சேதம் ஏற்பட்டதை நெடுஞ்சாலைத் துறையின் உதவிப் பொறியாளர் A.A.அசாருதீன் கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப, ம.சோ.சுகுமார் திறன்மிகு உதவியாளர், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப அவர்களின் மேற்பார்வையில் JCB இயந்திரத்தின் உதவியுடன் உடனடியாக சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நன்றித்தெரிவித்தனர்.