நாகர்கோவில் மே 28
உறவுகளால் கைவிடப்பட்டு உறைவிடமின்றி பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகம் அருகில் மழையில் நனைந்தபடி தரையில் தவித்த முதியவர் ஓடோடி சென்று உதவி கரம் நீட்டிய தொண்டு நிறுவனத்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் பகுதியில் நடக்க முடியாத முதியவர் ஒருவர் கடை வீதியில் மழையில் நனைந்தபடி இருந்துள்ளார். இவரை அப்பகுதியில் கடை நடத்தும் வடநாட்டை சேர்ந்த ஒருவர் கம்பை காட்டி அடித்து விடுவேன் இங்கு வராதே எனக் கூறி துரத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. குமரி மாவட்டம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் மழைக்கு ஒதுங்கும் பொருட்டு நடக்க முடியாமல் தவழ்ந்து வணிக வளாக பகுதியில் உள்ள கடை ஓரத்திலாவது ஒதுங்கலாம் என நினைத்து தவழ்ந்து சென்று ஒதுங்கும் நேரத்தில் கடையில் உள்ளவர்களால் விரட்டப்பட்டு நனைந்தபடி முதியவர் கிடப்பதாக தகவல் அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி யின் கீழ் வடசேரியில் இயங்கும் சினேகம் வீடற்றோர் தங்கும் இல்லத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா கலைவாணர் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லும்படி தனது இல்ல நிர்வாகிக்கு கூறியதின் அடிப்படையில் உடனடியாக அவசர ஊர்தியுடன் விரைந்து சென்ற நிர்வாகி கவிஞர் கலைவாணன்
அந்த முதியவரை சந்தித்து அவரிடம் மழையில் நனையாதபடி உங்களை பாதுகாப்பதற்காகவும், உங்களுக்கு தேவையான உணவுகளை செய்து தரவும், நல்ல ஆடைகளை உங்களுக்கு வழங்கவும், உங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து உங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தெரிவித்து
அந்த முதியவரை மீட்டு விடற்றோர் தங்கும் இல்லத்திற்கு அழைத்து வந்து முதலுதவிகள் செய்து அவரை பாதுகாத்து விசாரித்தபோது அந்த முதியவர் பெயர் ஜார்ஜ் வயது 70 எனவும் நாகர்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
மேலும் முதியவரை மீட்ட சினேகம் வீடட் டோர் இல்லத்தின் நிர்வாகியான கவிஞர் கலைவாணர் கூறும்போது
பொது இடங்களில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களை தயவு செய்து யாரும் தொந்தரவாக நினைக்க வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமது நாகர்கோவில் மாநகராட்சியால் ஆதரவற்றவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் சினேகம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தகவல் மட்டும் தந்தால் போதும் நாங்கள் அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை பாதுகாப்போம் என தெரிவித்து மனிதர்களாக இருப்போம் அனாதையாக இருக்கும் மனிதர்களை மதிப்போம் உதவி செய்வதில் மனிதத்தை கடைபிடிப்போம் என அறிவுரையும் வழங்கினார்.
மழையில் நனைந்தபடி கிடந்த முதியவரை மீட்ட சினேகம் வீடற்றோர் தங்கும் விடுதி நிர்வாகிகளின் செயலை அனைவரும் பாராட்டினர்.



