மறைந்த முன்னாள் தி.மு.க சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் முன்னாள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வீரபாண்டி ஆ.செழியன் நினைவு நாளை முன்னிட்டு வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மலர் மாலைகள் அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.மேலும் இதில் குடும்பத்தினர்
பிருந்தா செழியன்,திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் மருத்துவர் தருண், மருத்துவர் சூர்யா,சிந்து, மருத்துவர் ராம்குமார், பேத்திகள் தேன்மொழி,
கோச்சுடர்.மேலும் ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், உமா சங்கர், மற்றும் சந்திரமோகன், திருமலைகிரி ஒன்றிய செயலாளர் மாணிக்கம், திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



