சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் காகம் பறக்காத கானூர் கண்மாய் கரையில் அருள்பாலித்து வரும் கல்லூரணி மற்றும் சிறுகுடி கிராமப் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கள்வரை வென்ற கருப்பணசாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவாச்சார்யர்கள் மூலம் வேதங்கள் முழங்கிட கும்பக்கலசங்களுக்கு புனித நீரூற்றி முதலில் கள்வரை வென்ற கருப்பணசாமி , 61 சேணை மற்றும் 21 பந்தி தேவதைகளுக்கும் கும்பாபிஷேக விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
குடமுழுக்கு முடிந்து பக்தர்களுக்கு பொது அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊர் தலைவரும் கும்பாபிஷேக விழா ஒருங்கிணைப்பாளருமான ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பொன்மலையான் உள்ளிட்ட சிறுகுடி, கல்லூரணி கிராமப் பங்காளிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் கலந்து கொண்டு ஆலய தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கல்லூரணி மற்றும் சிறுகுடி கிராமப் பங்காளிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.