நாகர்கோவில் செப் 13
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது. எனவே ஓணம் பண்டிகை கேரளாவில் களையிழந்தது. இதனால் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கேரளத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான பூக்கள் அனுப்பி வைக்கப்படும். ஓணம் பண்டிகையின்போது மலர்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் நல்ல லாபமும் கிடைக்கும். குமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் கேரளாவில் இருந்து பூக்கள் வாங்க யாரும் வராததால் பண்டிகை தொடங்கி ஏழு நாட்கள் ஆகியும் பூக்கள் விற்பனை சரிவு விலை கடுமையான வீழ்ச்சி – இதனால் தோவாளை பூ வியாபாரிகளும் பூ விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பூச்சந்தைகளில் சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ள பூச்சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தை என்ற பெருமை பெற்றது இந்த பூச்சந்தையில் அனைத்து பண்டிகைகளுக்கு காலத்திலும் பூக்களில் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் அதிலும் குறிப்பாக ஓனைப்பண்டிகை என்றால் கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த ஓணப்பண்டிகைக்கு தேவையான அத்தப்பூ கோலங்கள் போட அணைத்து பூக்களுமே தோவாளை பூச் சந்தையில் இருந்து தான் கொண்டு செல்லப்படும் இந்த முறை கடந்த ஆறாம் தேதி முதல் ஒண பண்டிகை தொடங்கியது வரும் 15ஆம் தேதி பத்தாம் நாள் திருவோண பண்டியாக கொண்டாட படுகிறது. ஏழாவது நாள் ஓணம் பண்டிகை நாளாகும் முதல் நாள் ஓணம் தொடங்கியதிலிருந்து தோவாளை பூ சந்தைக்கு கேரளா வியாபாரிகள், கேரளா மக்களும் அதிகமாக வந்து பூக்கள் வங்கி செல்வார்கள். ஆனால் இந்த முறை கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிர்பலி காரணமாக கேரளா அரசு இந்த முறை ஓணப்பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் கேரளாவில் இருந்து பூக்கள் வாங்க யாரும் வராததால் பண்டிகை தொடங்கி ஏழு நாட்கள் ஆகியும் பூக்கள் விற்பனை சரிவு விலை கடுமையான வீழ்ச்சி – இதனால் தோவாளை பூ வியாபாரிகளும் பூ விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்
இந்த சீசனில் மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய் இருக்கும் கேரளாவில் இருந்து யாரும் வராததால் வெறும் 800 ரூபாயாக விலை சரிந்துள்ளது. இதே போல் பிச்சி பூவும் கிலோ 2 ஆயிரம் ரூபாய் இருக்கும் ஆனால் பிச்சிப்பூவும் 800 ரூபாய் விலை சரிவு ஏற்பட்டு உள்ளது ஓசூர் திண்டுக்கல் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பூக்கள் வந்து குவிந்தாலும் கூட கேரளாவில் இருந்து வியாபாரியிடம் பொது மக்களும் வராததால் பூக்களின் விற்பனை மந்தமாக உள்ளது விலையும் குறைவாக உள்ளது இதனால் தோவாளை பூ சந்தை களையிழந்து காணப்பட்டது.