மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் தளத்தில், புறநோயாளிகள் வருகை பதிவேடு, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கழிவறை, எலும்பு முறிவு மற்றும் மூடநீக்கியல் துறை, பயிற்சி அறை, ஆண்கள், பெண்கள் புறநோயாளிகள் இணையதளம் வாயிலாக பதிவு, நோயாளிகளின் விபரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், பொது மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்கேன் பிரிவு ஆகியவற்றையும்,
ஐந்தாம் தளத்தில், இரத்த சுத்திகரிப்பு பிரிவு, கழிவறைகள், தடையற்ற மின்சேவை பிரிவு ஆகியவற்றையும், ஆறாம் தளத்தில் மயக்கவியல் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிறகு பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவுகளையும், தரைதளத்தில் சலவையகம், ஆக்சிஜன் சேமிப்பு மையம், சமையலகம், பிரேத பரிசோதனை அறை ஆகியவற்றை பார்வையிட்டு, வெளிப்புற நோயாளிகள் வருகை புரியும் இடங்கள், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும், உணவு தயாரிக்கப்படும் கூடத்தில், தினசரி நோயாளிகளுக்கு வழங்கும் உணவு வகைகள், காய்கறிகள் குறித்து கேட்டறிந்தார். இன்று நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரியை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகர், மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மரு.சாத்விகா, உள்ளிருப்பு துணை மருத்துவ அலுவலர்கள் மரு.ராஜா, மரு.தினேஷ், மருத்துவமனை நிர்வாக அலுவலர் .சரவணன், இளநிலை நிர்வாக அலுவலர் .சக்திவேல் மற்றும் வட்டாட்சியர் .வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.